Home Accident News பளை பேருந்து விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை அகற்றப்பட்ட துயரம்!

பளை பேருந்து விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை அகற்றப்பட்ட துயரம்!

13

கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் கடந்த 21ம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த 6 வயது சிறுவன் ஒருவனின் ஒரு கை அகற்றப்பட்டுள்ளது.

வீதியில் பந்தய ஓட்டம் ஓடிய இ.போ.ச சாரதியால் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து கடந்த 21ம் திகதி மாலை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பணியாற்றும் அரச ஊழியரான யாழ்.சாவகச்சோி – அரசடியை சேர்ந்த ஜீவானந்தம் சுகிர்தினி(வயது-32) என்பவர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்தனர்.

அதில் காயமடைந்த முள்ளிவாய்க்காலை சொந்த இடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட ரொட்மன் ரொணிக் ரொபின் (வயது-6) என்ற சிறுவனின் இரு கைகளும் காயமடைந்த நிலையில், ஒரு கை அகற்றப்பட்டிருக்கின்றது.

பளை பேருந்து விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை அகற்றப்பட்ட துயரம்! - mutamil News - 24x7 Tamil Breaking News Website பளை பேருந்து விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை அகற்றப்பட்ட துயரம்! - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleஇன்றைய ராசிபலன் – 25/12/2022, மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleமுல்லைத்தீவில் கருக்கலைப்பு மூலம் பிரசவிக்கப்பட்ட சிசுவின் எச்சங்கள் மீட்பு? (படங்கள்)