Home Accident News நாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது

நாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது

10

கொழும்பு -கொள்ளுப்பிட்டி பகுதியில் விபத்​தொன்றை ஏற்படுத்தி விட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்ற 26 வயதான இளைஞர், நேற்று (12) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை(10) காலை கொள்ளுபிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 58 வயதுடைய ஓட்டோ சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில், சொகுசு காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபர், அன்றைய தினமே டுபாய்க்கு தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு (12) 9.50 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.648 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர், குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேகநபர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், கொள்ளுப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று, சந்தேகநபரை கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்தி…

கொள்ளுப்பிட்டி பென்ஸ் கார் – முச்சக்கரவண்டி விபத்தின் பின்னர், பென்ஸ் காரை ஓட்டிச் சென்ற கோடீஸ்வர வர்த்தகர் நாட்டை விட்டு தப்பிச் சென்றமைக்கான சந்தேகத்திற்கிடமான ஆதாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஓடிய காரை ஓட்டி வந்தவர் கோடீஸ்வர தொழிலதிபர் என்றும், உண்டியல் முறை மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூறியிருந்தனர்.

விபத்தின் பின்னர் தெஹிவளை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் சந்தேகநபருக்கு சொந்தமானது என நம்பப்படும் இரண்டு வீடுகளை சோதனையிடச் சென்ற பொலிஸார், அவர் அங்கு இல்லாத காரணத்தினால் வெறுங்கையுடன் திரும்பினர் .

பென்ஸ் காரை ஓட்டி வந்த இந்த கோடீஸ்வரர் முகமது ரசூல் முகம்மது ரிசாக் தற்போது நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்படும் போது, ​​அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், ரோமிங் வசதி மூலம் அழைப்பு இணைக்கப்படும் எனவும், பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகி, தப்பிச் செல்வதற்கு முன், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் அவரை இலங்கையில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மூன்று இரவு விடுதிகளுக்குச் சென்று மது அருந்தியதாகக் கூறப்படும் 5 பேர் கொண்ட குழுவை ஏற்றிச் சென்ற பென்ஸ் ரக கார் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நேற்று முந்தினம் (10) கொள்ளுப்பிட்டி, அல்பிரட் மாவத்தையில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கர வண்டி சாரதி நூர்தீன் துவான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Previous articleதிருகோணமலை பொது வைத்தியசாலையில் இளம் தாயை பலியெடுத்த சத்திர சிகிச்சை!! நடந்தது என்ன?
Next articleசீருடையில் சென்று கொள்ளை!! பொலிஸ் உத்தியோகஸ்தரை அடித்து துவைத்த பொதுமக்கள் – வீடியோ