Home Local news தொட்டில் புடவை கழுத்தில் சிக்கி குழந்தை பலி

தொட்டில் புடவை கழுத்தில் சிக்கி குழந்தை பலி

10

ஹப்புத்தளை, பிதரத்மலேவத்த பகுதியில் புடவையில் கழுத்து சிக்கி 12 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்கையை தூங்க வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த புடவை தொட்டிலில் கழுத்து சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

12 வயது குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், கழுத்து நெரிக்கப்பட்டதால் குழந்தை உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவிளையாட்டு பொருட்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன !
Next articleகிளிநொச்சி பல்வைத்தியரால் பரலோகம் போக இருந்த யுவதி!! அதிர்ச்சி தகவல் இதோ