கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு ரயில் பாதையில் சென்ற பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொட்டகலைக்கும், ஹட்டனுக்கும் இடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
அந்த வகையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் அந்த ரயிலில் கொட்டகலை ரங நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சடலத்தை கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த யுவதி ஹட்டன் – குடாஓயா பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.