Home Local news தென்னிலங்கையில் கோர விபத்து – ரஷ்ய பெண் உட்பட இருவர் பலி

தென்னிலங்கையில் கோர விபத்து – ரஷ்ய பெண் உட்பட இருவர் பலி

9

காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை ஹபராதுவ, தலவெல்ல, மஹரம்ப புகையிரத கடவைக்கு அருகில், உயிரிழந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், ரஷ்ய பெண் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

புகையிரத கடவையில் உள்ள புகையிரத கேட் இயங்காதது குறித்து வாகன சாரதிகளுக்கு அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleகணவன் வெளிநாட்டில்!! பேஸ்புக் காதலனுடன் மனைவி உல்லாசம்!! வீட்டில் உள்ளவற்றை சுருட்டிக் கொண்டு ஓடிய காதலன்!!
Next articleகாதலியை அடித்து கடித்து துன்புறுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்