Home Local news துப்பாக்கியுடன் சடலமாக மீட்கப்பட்ட 25 வயது இளைஞன்!

துப்பாக்கியுடன் சடலமாக மீட்கப்பட்ட 25 வயது இளைஞன்!

13

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 25 வயதான இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், அவருக்கு அருகிலிருந்து நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா – குடகச்சிக்கொடியில் இடம்பெற்றுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குடாகச்சிக்கொடிய மானேரிகுளம் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்ற குறித்த இளைஞர் அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியினை சிக்குண்டு பலியாகியுள்ளார்.

குடாகச்சிகொடிய மேதாமாவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய உமேஸ் லக்சன் என்கிற இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மடுக்கந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Previous articleவீடு புகுந்து கொள்ளை – பருத்தித்துறையில் நான்கு இளைஞர்கள் கைது – நகைகளும் மீட்பு!
Next articleகுத்துச் சண்டை வீரர் கடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியானது