Home Local news திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த இளம் யுவதி! திடீரென உயிரிழந்தார்

திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த இளம் யுவதி! திடீரென உயிரிழந்தார்

29

ஹொரணை – பதுவிட்ட பிரதேசம், மெகொட உட கெவத்த பிரதேசத்தில் திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துக்கொண்டு நண்பர்களுடன் நடனமாடியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து யுவதி மேலும் இரு யுவதிகளுடன் அங்கிருந்து திடீரென வெளியேறி சுகயீனமடைந்த நிலையில் ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது யுவதியை பரிசோதித்த அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவரை ஹொரணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஹொரணை வைத்தியசாலைக்கு யுவதியை அழைத்துச் சென்றதையடுத்து, பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇன்றைய ராசிபலன்கள் – 28/08/2023
Next articleஇன்றைய ராசிபலன்கள் – 29.08.2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here