Home trincomalee news திருகோணமலையில் கோர விபத்து!! 9 வயதான சிறுமி உட்பட இருவர் பலி, மேலும் ஒரு சிறுமி...

திருகோணமலையில் கோர விபத்து!! 9 வயதான சிறுமி உட்பட இருவர் பலி, மேலும் ஒரு சிறுமி உட்பட இருவர் படுகாயம்

607

திருகோணமலை – உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் 9 வயதுடைய சிறுமியொருவர் தலை நசியுண்டு பலியனார்.

அவருடன் சென்ற இன்னுமொரு சிறுமி கால் எலும்புகள் நொறுங்கிய நிலையில் அவசர விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ரியூசன் முடிவடைந்து சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் வான் ஒன்று இவர்களை முந்த முயன்றுள்ளது. அந்நேரம் நோயாளர் காவுவண்டி ஒன்றும் வேகமாக வந்துள்ளது.

நோயாளர் காவுவண்டிக்கு பாதை கொடுக்கும் நோக்கில் வான் சாரதி விதியை மருவி வாகனத்தை செலுத்தியதால் வீதியால் சென்ற மூவரையும் வான் பந்தாடியுள்ளது.

இத்தனை தொடர்ந்து மூவரும் திருகோணமலை போது வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு மூளை சாவு ஏற்பட்டதால் 9 வயதான திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி பயின்று வரும் எட்ரிக் செர்லின் என்ற சிறுமி சிகிக்சை பலனின்றி பலியானார்.

திருகோணமலையில் கோர விபத்து!! 9 வயதான சிறுமி உட்பட இருவர் பலி, மேலும் ஒரு சிறுமி உட்பட இருவர் படுகாயம் - mutamil News - 24x7 Tamil Breaking News Website

மற்றைய சிறுமி கவிஷாலினி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களை அழைத்து சென்ற உறவுக்கார பெண் லிண்டா சிறு காயங்களுடன் தொடர்ந்தும் அவசர சிகிக்சை பிரிவில் சிகிக்சை பெறுகின்றார்.

இதேவேளை சீனக்குடா பகுதியில் இருந்து வந்த சொகுசு வானில் பெண் ஒருவரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு செல்லும் வேளையிலே மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது வானில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய் தந்தையர் பிரிந்து வாழும் நிலையில் குறித்த சிறுமியின் இழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியை திருகோணமலை-துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mini Smartphone iLight 11 Pro The World’s Smallest Android Mobile Cellphone, Super Small Micro 2.5in Touch Screen Global Unlocked Great for Kids 1GB RAM / 8GB ROM Tiny iPhone XI Pro Look Alike

Previous articleதுவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் போலி அறிக்கைகள்!!
Next articleமர்ம நபரால் வழங்கப்பட்ட ஐஸ் பானம் – சிறுவனுக்கு நேர்ந்த கதி! பெற்றோர்களே மிகவும் அவதானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here