Home Astrology news தனுசு ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

தனுசு ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

8
தனுசு ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

தனுசு ராசி நேயர்களே, சென்ற ஆண்டை விட நல்ல பலன் தரும் ஆண்டாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் 2ம் வீட்டில் இருக்கிறார் ஆனால் ஜனவரி 17 அன்று மூன்றாம் வீட்டிற்கு வருவதால் உங்கள் மன வலிமையும் அதிகரிக்கும். வெளியூர் பயணம் மற்றும் தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும்.

உங்கள் முக்கிய கிரகமான குரு பகவான் தனிப்பட்ட முயற்சிகள் மூலம் உங்களுக்கு பெரிய வெற்றியைத் தருவார். உத்யோக பணியில் சில இடையூறுகள் ஏற்பட்டு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

ஏப்ரல் மாதத்தில், குரு பகவான் 5ம் வீட்டில் ராகுவுடன் வந்து குரு சந்தோஷத்தை உண்டாக்குவார். இந்த நேரத்தில், உங்கள் காதல் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் உங்கள் காதல் உறவும் பாதிக்கப்படலாம். தேக நலனில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் சிக்கலையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

தனுசு ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023 (புத்தாண்டு பலன்கள் - தனுசு ராசி வரும் இருக்கும் கிடைக்கும் நல்ல வேலை குரு பணம் ராகு கேது பலன்கள் astology today tamil news)

அக்டோபர் 30 ஆம் தேதி ராகு 4ம் வீட்டிற்கு வருவார் மற்றும் குரு மட்டும் 5ம் வீட்டில் சனியும் உங்கள் மூன்றாவது வீட்டில் சனியும் இருக்கும். இந்த நேரம் வெற்றிகரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் அடைய முடியும். உடல் ரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

தொடர் அலைச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். இந்த புத்தாண்டு ஏழரை சனி, மற்றும் ஜென்ம சனி ஆதிக்கத்தில் பிறக்கிறதே என கவலைகொள்ள தேவையில்லை, ஏன் எனில் சனியின் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால், பெரிய பாதிப்புகள் வர வாய்ப்பு இல்லை. உங்கள் மதிப்பு மரியாதையை உயர்த்திக்கொள்ள இந்த ஆண்டு வழி பிறக்கும்.

நீங்கள் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்து காட்ட முடியும். நமக்கு இன்னும் ஏழரை சனி காலம் முடிய வில்லையே என பயப்பட வேண்டாம். இனி வரும் காலங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உங்கள் கௌரவம் உயருகின்ற வகையில் சம்பவங்கள் நிகழும். நல்ல வாய்ப்புகள் வரும்போதே அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளவும். அவசரப்பட்டு இறங்கும் காரியங்கள் சில நேரங்களில் சிரமத்தில் முடியும்.

வெளியூர் பயணங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். சொத்துக்கள் விஷயத்தில் உடன்பிறந்தோர் உங்களோடு ஒத்துப்போவார்கள். நண்பர்கள் மூலமாக நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். பொருளாதாரம் உயரும். எதிர்பாராத நபர்களிடமிருந்து பெரியளவில் ஆதரவு கிடைக்கும். எல்லா விஷயங்களுக்கும் உடனடி தீர்வை காண முடியும்.

எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். கடன் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை மனதில் பிறக்கும். வீடு கட்டும் பணி மீண்டும் தொடரும். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். வாழ்க்கைத் துணைவரின் ஆலோசனையின்படி நடப்பது நன்மை தரும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும்.

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். சொத்து வழக்கில் எதிர்பார்த்த தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பணிச் சுமை கூடும். உத்யோகத்தில் பண பரிமாற்றங்களில் கவனம் தேவை.

தொழில், வியபாரத்தில் புதிதாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த ஏற்ற தாழ்வுகள் நீங்கும். இந்த வருடம் உங்கள் ராசிக்குரிய எளிய பரிகாரங்கள் செய்து வந்தால் நலம் மிக்க ஆண்டாக அமையும். எதையும் திட்டமிட்டபடி உங்கள் பணிகளை செய்தால் இந்த ஆண்டு பெரியளவில் வெற்றிகளை குவிக்கலாம்.

குறிப்பு : இந்த 2023ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

Previous articleவிருச்சிக ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023
Next articleமகர ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023