ட்ரெக்டர் கவிழ்ந்ததில் நால்வர் வைத்தியசாலையில்
அக்கரப்பத்தனை -டொரிங்டட்ரெக்டர் கவிழ்ந்ததில் நால்வர் வைத்தியசாலையில்ன் தோட்டத்தில் உரம் ஏற்றிச் சென்ற ட்ரெட்டர் கவிழ்ந்ததில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டொரிங்டன் தேயிலை தொழிற்சாலையிலிருந்து கல்மதுரை பிரிவு உரம் ஏற்றிச் சென்ற ட்ரெக்டர், பாலத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று ( 05 ) காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ட்ரெக்டரில் சாரதியுடன் 03 தொழிலாளர்கள் பயணித்துள்ளதுடன், இதன்போது நால்வரும் காயங்களுக்கு உள்ளாகி அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான 55 வயதுடைய ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.