Home CRIME NEWS சொக்லேட் திருடிய விவகாரம்!? யுவதி மீது கொலைவெறி தாக்குதல் நடாத்திய கார்கில்ஸ் ஊழியர்கள் 5 பேர்...

சொக்லேட் திருடிய விவகாரம்!? யுவதி மீது கொலைவெறி தாக்குதல் நடாத்திய கார்கில்ஸ் ஊழியர்கள் 5 பேர் கைது!

14

கார்கில்ஸ் பல்பொருள் அங்காடி ஒன்றில் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு யுவதிகள் உட்பட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த சம்பவம் பொரளை கோட்டா வீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பதிவாகியுள்ளது.

கடந்த 18ஆம் திகதி கடையில் சொக்லேட்களை திருடிச் சென்ற சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி :-

கார்கில்ஸ் சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: வெளியான அதிர்ச்சி காணொளி

[/video]
Previous articleபணமோசடி வழக்கில் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இளைஞனுக்கு இந்தியாவில் சிறை
Next articleயாழில் பிரபல பாடசாலை மாணவியின் வீட்டு கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட மாணவன் நையப்புடைப்பு