Home Local news சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் தோட்டாக்கள் மீட்பு !

சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் தோட்டாக்கள் மீட்பு !

19

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீனிபுர பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் சந்தேகத்துக்குரிய பைப் (குழாய்) ஒன்றில் தோட்டாக்கள் இருந்துள்ளது.

அதனை சிறுவர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்திய பின் அக்போபுர பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்போபுர குற்றத்தடுப்பு பொலிஸார் அனைத்தையும் மீட்டு இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Previous articleகாணாமல் போன இளைஞனை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் !
Next articleஇன்றைய ராசிபலன் – 04/11/2022, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..