Home Local news சமூக ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை

சமூக ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை

11

சமூக ஊடகங்கள் தொடர்பான சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் சட்டங்கள் காணப்படுகின்ற நிலையில், சமூக ஊடகங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான சட்டங்கள் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தை தாம் கொண்டுவந்துள்ளதாகவும், அதனை ஆராய்ந்து எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்ற சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Previous articleபிறந்த குழந்தையைக் கொலை செய்து மலசலகூட பாத்திரத்தில் மறைத்து வைத்த பெண் கைது!
Next articleBest GPS Camera Apps for Android & iPhone