Home Jaffna News சட்டவிரோத கசிப்பு பிடிக்கச் சென்ற பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாயம்!! கிளிநொச்சியில் பரபரப்பு!

சட்டவிரோத கசிப்பு பிடிக்கச் சென்ற பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாயம்!! கிளிநொச்சியில் பரபரப்பு!

12

கிளிநொச்சி, மலையாளபுரத்தில் கசிப்புக் காய்ச்சுபவர்களைச் சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டுள்ளபோதும், இதுவரை பொலிஸ் உத்தியோகத்தரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மலையாளபுரம், புதுஐயங்கன்குளத்தில் கசிப்புக் காய்ச்சுபவர்கள் தொடர்பான தகவல் கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

இன்று (செப்ரெம்பர் 14) காலை 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த இடத்துக்குச் சென்று விசாரணகைளை ஆரம்பித்தனர்.

அங்குள்ள காட்டுப் பகுதியில் பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் மேற்கொண்ட நிலையில், அவர்களில் ஒருவர் இன்னமும் மீளத் திரும்பவில்லை.

அந்தப் பகுதி அடர்ந்த காடு என்பதால் காணாமல்போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தரைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleசட்டவிரோத மீன்பிடிக்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக கிழக்கில் குற்றச்சாட்டு
Next articleதொலைபேசி கேட்ட மகள், கொடுக்க மறுத்த தாய்!! 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை