Home Jaffna News சங்குப்பிட்டி சோதனைச்சாவடியில் சிப்பாயை மோதிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற 2 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

சங்குப்பிட்டி சோதனைச்சாவடியில் சிப்பாயை மோதிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற 2 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

8

பூநகரி, சங்குப்பிட்டியிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியில் விபத்துக்குள்ளான இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வலையை எடுத்துக் கொண்டு மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

சங்குப்பிட்டி சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இராணுவச்சிப்பாய் நிறுத்துமாறு சைகை செய்துள்ளார். எனினும், நிறுத்தாமல் வந்தவர்கள், சிப்பாயை மோதித்தள்ளி விட்டு தொடர்ந்து பயணிக்க எத்தனித்துள்ளனர்.

சோதனைச்சாவடி பகுதியில் நின்ற மற்றொரு சிப்பாய், துரிதமாக நகர்த்தக்கூடிய வீதித்தடையொன்றை மோட்டார் சைக்கிளிற்கு குறுக்கே தள்ளிவிட்ட போது, அதில் மோதி விபத்திற்குள்ளாகினர்.

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் – 23/02/2023, மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…
Next articleதேர்தலை நடத்த 500 ரூபாவை கொடுத்தார் யாழ்.இளைஞன்