கொழும்பின் முன்னணி பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளர் எனவும் பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனை மற்றும் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வங்கி முகாமையாளர் மனைவியை இழந்தவர் என்றும், அவருக்கு 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமி கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், அவரது வீட்டுத் தொலைபேசிக்கு சில மாதங்களுக்கு முன்வந்த தவறிய அழைப்பு (மிஸ்ட் கோல்) மூலம் சந்தேகநபரான வங்கி முகாமையாளருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.