Home CRIME NEWS கொடூரமாக தாக்கப்பட்ட தந்தை மற்றும் மகள்! காப்பாற்ற சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

கொடூரமாக தாக்கப்பட்ட தந்தை மற்றும் மகள்! காப்பாற்ற சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

17

பொல்பிதிகம நிகதலுபத பிரதேசத்தில் கத்தி குத்துக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணி தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரும் அவரது மகளும் நபர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர்.

இந்த மோதலை கட்டுப்படுத்த உயிரிழந்த பெண் அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் குறித்த பெண்ணை கூரிய கத்தியொன்றில் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 55 வயதுடைய குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

மேலும் காயமடைந்த தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Previous articleயுவதியைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த சந்தேகநபர் நையப்புடைப்பு
Next articleஏழு வெந்நீர் ஊற்றும் பறிபோகும் அபாயம்