Home மலைநாட்டு செய்திகள் குருக்களின் உதவியாளர் மரணம்: குருக்கள் கைது

குருக்களின் உதவியாளர் மரணம்: குருக்கள் கைது

24

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளவட்டன் தோட்ட பிள்ளையார் ஆலயத்தின அறையொன்றில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சிறுவனின் சடலம், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ராமமூர்த்தி பார்வையிட்டார்.

அதன் பின்னர் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம், செவ்வாய்க்கிழமை (03) மாலை கொண்டுச்செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஆலய குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒஸ்பன் தோட்ட கீழ்ப்பிரிவில் வசித்து வந்த எஸ். ஜனநாதன் (வயது 16) சிறுவனே தோட்டத்தின் விநாயகர் ஆலய அறையில் செவ்வாய்க்கிழமை (03) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவர் பிரதான குருக்களுக்கு உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

16 வயதான இளம் பூசகரின் விபரீத முடிவு

Previous articleஅரச ஊழியர்களின் சம்பளத்தை 20000 ரூபாவால் அதிகரிக்க சொன்னவர்களிற்கு நிதி அமைச்சு கொடுத்த பரிசு
Next articleபதினாறு வயதுடைய 2 சிறுமிகள் மாயம்: பொலிஸார் தேடுதல் வேட்டை