Home Astrology news கும்ப ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

கும்ப ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

12
கும்ப ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

கும்ப ராசி நேயர்களே, இந்த 2023ம் ஆண்டில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் கிடைக்க போகிறது. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். உடல் ரீதியான பிரச்சனைகள் வரலாம். ஆனால் ஜனவரி 17 அன்று உங்கள் ராசி அதிபதி சனி பகவான் உங்கள் சொந்த ராசிக்கு வருவார் இதன் காரணமாக நீங்கள் மிகவும் சாதகமான பலன்களைப் பெற முடியும்.

அயல்நாட்டுத் தொடர்புகளால் பணப் வரவு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய நபர்களின் தொடர்பால் வியாபாரத்தை அதிகரிக்க முடியும். ஏப்ரல் மாதத்தில் குரு 3ம் வீட்டில் வீட்டில் பெயர்ச்சி செய்கிறார்.

உடன்பிறந்தவர்கள் உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் சில சவால்களை சந்திக்க நேரிடலாம்.குறுகிய தூர பயணங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மன அழுத்தத்தை நீக்கும் சில மதம் சார்ந்த பயணங்களும் இருக்கும். உங்களுக்கு அமைதியையும் ஆறுதலையும் தரும்.

கும்ப ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023 புத்தாண்டு பலன்கள் - கும்ப ராசி புதிய வேலை கிடைக்கும் நல்ல வரும் இருக்கும் ராகு கேது ராசிபலன்கள் astology today tamil news

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். செலவுகள் குறையும் மற்றும் நிதி நிலை வலுவாக இருக்கும். அக்டோபர் 30க்குப் பிறகு ஆண்டின் கடைசி நாட்களில் ராகு இரண்டாம் வீட்டில் பெயர்ச்சி செய்வதால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

இந்த 2023ம் ஆண்டில் குடும்ப எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த புத்தாண்டு நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல விதமாக அமையும். நீங்கள் தொட்டது துலங்கும். மற்றவர்கள் உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்ளும்படி இருக்கும். மனதினில் எதையும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். எங்கே, எப்படி நடந்து கொள்வது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

உடன்பிறந்தவர்களால் செலவுகளை சந்திக்க நேரிடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குறிப்பாக சுப செலவுகள் அதிகளவில் உண்டு. நிறுத்தி வைத்திருந்த காரியங்களை செய்ய தொடங்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும்.

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. புது வீடு மனை வாங்கும் திட்டம் கைகூடும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாக தொடங்கும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவு நீங்கி சமரசம் ஏற்படும்.

பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர். காதல் விவகாரங்களில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஒரு சிலர் பூர்விக இடத்தை விட்டு வெளியூர் சென்று தங்க நேரிடும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மனக்குழப்பம் ஏதும் வராமல் இருக்க தினமும் தியானம் செய்யவும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

ஒரு சிலருக்கு வெளிநாட்டில் உத்யோகம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் அமோகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கணிசமான முறையில் உயரும்.

குறிப்பு : இந்த 2023ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

Previous articleமகர ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023
Next articleமீன ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023