Home Tamil News கிளிநொச்சியில் நடு வீதியில் பாரவூர்தியை மறித்துச் சாரதி மீது கத்திக் குத்து!

கிளிநொச்சியில் நடு வீதியில் பாரவூர்தியை மறித்துச் சாரதி மீது கத்திக் குத்து!

9

கிளிநொச்சியில் சாரதியை கீழ் இறக்கி கூரிய ஆயுதத்தால் குத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கிளிநொச்சி நகரில் ஏ-9 வீதியில்நேற்றைய தினம் (02-03-2023) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

சாரதிக்கும் கைதான நபருக்கும் இடையே காணப்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இவ்வாறான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

தேங்காய் வியாபாரம் செய்து வந்த இருவருக்கும் இடையில் பண கொடுக்கல் வாங்கல் காணப்பட்டது.

குறித்த பாரஊர்தியின் சாரதிக்கும் கைதான நபருக்கும் இடையில் இன்று பகல் முரண்பாடு ஏற்பட்டது. சாரதி பணத்தை திருப்பி கொடுக்காது பார ஊர்தியை செலுத்தியுள்ளார்.

இடைமறித்து பணத்தை கேட்டபொழுது இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு முற்றியுள்ளது.

இந்த நிலையில், கத்தி ஒன்றினால் சாரதி தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇரவு கடுகதி ரயிலின் தேநீர்ச்சாலை சுகாதார பிரிவினரால் சுற்றிவளைப்பு : மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மீட்பு!
Next articleமனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் பூசிய கணவனுக்கு வலை