Home Accident News கார் விபத்தில் திருக்கோவிலை சேர்ந்த இருவர் பலி

கார் விபத்தில் திருக்கோவிலை சேர்ந்த இருவர் பலி

9

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (14) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

திருக்கோவில் இருந்து கொழும்பு சென்ற கார் லொறியுடன் மோதியதில் காரில் பயணித்த 4 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காரை செலுத்தி சென்ற மகன் , அவரது தந்தை, பெரியப்பா மற்றும் பெரியம்மா ஆகியோர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தந்தை மற்றும் பெரியப்பா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் திருக்கோவிலை சேர்ந்த 70 மற்றும் 75 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 35.9 R KM போஸ்டில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous articleபோதை மாத்திரைகளுடன் வைத்தியர் சிக்கினார்
Next articleமாணவி இழுத்து செல்லப்பட்டு துஷ்பிரயோகம் …. 17 வயது இளைஞன் பொலிஸாரால் கைது