15 வயதுடைய மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான் நளின் இம்புல்கொட உத்தரவிட்டுள்ளார்.
42 வயதான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனின் தாயும் தந்தையும் வெளிநாட்டில் இருப்பதாகவும், தாயின் சகோதரியுடன் சிறுவன் வளர்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவனின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் ஆசிரியை வந்து, மாணவனுடன் தங்கியிருந்துள்ளார்.
சிறுமியின் சிறிய தாய் வீட்டிற்கு வந்த போது, ஆசிரியையும், சிறுவனும் வீட்டு அறையின் சோபாவில் அமர்ந்திருந்ததையும் சிறுவனின் முகத்தில் ஆசிரியை முத்தமிடுவதையும் கண்டுள்ளார்.
அதை கவனித்த சிறியதாய், வீட்டிற்குள் சென்று வெளிநாட்டில் இருக்கும் சகோதரிக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார்.
வெளிநாட்டிலுள்ள சகோதரியின் ஆலோசனைப்படி, மகனின் தொலைபேசியை சோதனையிட்ட போது, ஆசிரியை அனுப்பிய காதல் ரசம் கொட்டும் குறுஞ்செய்திகள் சிக்கின.
“உன்னை பார்க்காமல் என்னால் வாழ முடியாது”, “நீ வாசனையாக இருக்கிறாய்.” உள்ளிட்ட பல குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.