ரத்கம ஓவகந்த பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை உறவினர் ஒருவர் கத்தியால் குத்தியதில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தாய் பலத்த காயமடைந்து காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று (26) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் உறவு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து கத்திக்குத்து நடந்துள்ளது.
55 வயதான நபர் ஒருவர் தனது சகோதரியான 42 வயதான பெண் மீதும், 20 வயதான மகள் மீதும் கத்திக்குத்து நடத்தியுள்ளார்
ரத்கம ஒவகந்த பகுதியைச் சேர்ந்த பதுரகட ஷியாமலி (20) என்ற பெண்ணே கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அவருக்கு இரண்டு வயது குழந்தை உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ரத்கம பிரதேச சபையில் பணிபுரியும் 55 வயதுடைய சிறு ஊழியர் ஆவார்.
சந்தேகநபரின் 17 வயது மகன் கொலையுண்ட பெண்ணின் கணவனின் சகோதரியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர், காதல் தொடர்பில் விசாரிப்பதற்காக குறித்த வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்போது ஏற்பட்ட சண்டையில் சந்தேக நபர் கத்தியால் தாயையும் மகளையும் சரமாரியாக குத்தியுள்ளார்.