Home Local news காதலனுக்காக 17 வயது சிறுமி செய்த காரியம்

காதலனுக்காக 17 வயது சிறுமி செய்த காரியம்

7

சிறையில் உள்ள காதலுனுக்கு ஐஸ் போதைப் பொருள் கொண்டு சென்ற 17 வயது சிறுமி ஒருவர் சிறைசசாலை உத்தியோகஸ்த்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தும்பரை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 20 வயதுடைய குறித்த சந்தேகநபரின் சகோதரியினால்

போதைப்பொருள் அடங்கிய குறித்த பொதியை விளக்கமறியலில் உள்ள தனது சகோதரனிடம் ஒப்படைக்குமாறு குறித்த சிறுமியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது பொதியில் இருந்த காற்சட்டையில்

சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டு சிறிய பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட மாணவிக்கு போதைப்பொருள் அடங்கிய பொதியை வழங்கிய பெண்ணை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமாயமான மீனவர் 16 நாட்களின் பின் மீட்பு
Next articleஒருமுறைக்கு இருமுறை கர்ப்பம்… காதலன் கைவிட்டதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!