Home Uncategorized காணி மோசடி – சட்டத்தரணி உட்பட ஐவர் கைது

காணி மோசடி – சட்டத்தரணி உட்பட ஐவர் கைது

8

சட்டவிரோதமான முறையில், ஆறு பரப்பு காணிக்கு பொய்யான காணி உறுதிப்பத்திரத்தை செய்து முடித்த குற்றச்சாட்டின் கீழ் சட்டத்தரணி ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட விசாரணை பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுமடம் பகுதியில் உள்ள குறித்த காணியின் உரிமையாளர் கடந்த 1988ம் ஆண்டு இறந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த நபர் குறித்த காணியை 2021ம் ஆண்டு விற்பனை செய்துள்ளதாக காணி உறுதி முடிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை வாங்கியவர் மற்றும் சாட்சி கையொப்பமிட்டவர்கள் என நால்வர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதாகியிருந்த நிலையில், அதற்கு உடந்தையாக இருந்து பதிவுகளை மேற்கொண்ட சட்டத்தரணி இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சட்டத்தரணி கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் காணி மோசடி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகொழும்பில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! 2 பெண் பிள்ளைகளின் தந்தையான 50 வயது வங்கி முகாமையாளர்கைது
Next articleசிறுநீரக கடத்தல் மோசடி விவகாரம்! கொழும்பு தனியார் வைத்தியசாலை விளக்கம்