Home Local news காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த தாய் மரணம் !

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த தாய் மரணம் !

9

வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, தாய் ஒருவர் காலமாகியுள்ளார்.

உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயான இவர் உண்மை புலப்படாமலேயே நோய் காரணமாக காலமாகியுள்ளார்.

வவுனியா கல்மடு பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில் நேற்று காலமாகியுள்ளார்.

இவரது மகன் 1991.02.02 பிறந்த இராமச்சந்திரன் செந்தூரன் என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தினக்கூலி வேலைக்குச் சென்ற வேளை 2007.05.17 அன்று கடத்தப்பட்டதாகவும், அவ்வாறு கடத்தப்படும் போது அவருக்கு வயது 16 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்ட தனது மகனை மீட்டுத் தரக்கோரி பல வருடங்களாக போராடிய தாய் இறுதி வரை மகனைக் காணாமலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.

Previous articleகிளிநொச்சியில் இராணுவச் சீருடையுடன் திருடன்!! மக்களால் மடக்கிப் பிடித்து நையப்புடைப்பு!
Next articleசுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இலங்கையை அடைந்தது!