வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் நெருக்கமாக பழகியதாக குறிப்பிட்டு, பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பிளேட்டினால் தனது கழுத்தை அறுத்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு வந்த பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த 38 வயதான 4 பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணொருவரே தனது கழுத்தை அறுத்தார்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தருடன் நெருக்கமாக பழகியதாகவும், அவருடன் தன்னை இணைத்து வைக்குமாறும் கோரி வந்துள்ளார்.
எனினும், அந்த குற்றச்சாட்டை பொலிஸ் உத்தியோகத்தர் மறுத்து வந்துள்ளார்.
அந்த பொலிஸ் உத்தியோகத்தருடன் பல தடவை நெருக்கமாக இருந்ததாக குறிப்பிட்டு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்திருந்தார்.
அந்த பொலிஸ் உத்தியோகத்தர் வாழைச்சேனைக்கு இடமாற்றப்பட்டதை தொடர்ந்து, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு சரியான தீர்வை வழங்குமாறு கோரி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு வந்த குடும்பப் பெண், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.