Home Astrology news கன்னி ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

கன்னி ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

12
கன்னி ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

கன்னி ராசி நேயர்களே, இந்த 2023ம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் சில எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம் இதன் காரணமாக உங்கள் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு சில நல்ல பலன்களைப் பெற முடியும்.

ஜனவரி 17ஆம் தேதி 6ம் வீட்டிற்குச் செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலையில் நல்ல சூழ்நிலைகள் அமையும். நீங்கள் சந்திக்க இருந்த மோதல்கள் மற்றும் பிரச்சனைகள் காணாமல் போகும். உங்கள் எதிரிகளை வென்று ஆதாயம் அடைய முடியும்.

உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. தொழிலில் வெற்றி பெறுவது உறுதி. குரு 7ம் வீட்டில் அமர்வதால் உங்கள் திருமண வாழ்க்கையில் இருந்த டென்ஷன் நீங்கி நெருக்கம் உண்டாகும்.

இது உங்கள் உறவை மேலும் பலப்படுத்தும். இதற்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் குரு உங்கள் எட்டாவது வீட்டிற்குச் செல்வதால் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். சனி பகவானுக்கு வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செய்யும் யோகமும் உண்டாகும்.

அக்டோபர் 30-ம் தேதி 8ம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகு உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உடல்நிலையில் சில தொந்தரவுகளை கொடுக்கும், ஆகையால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.

இந்த 2023ஆம் வருடம் பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையில் இருக்கும். இந்த புத்தாண்டு எல்லா விதத்திலும் சாதகமான பலனை தரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நாளடைவில் நடந்து விடும். பண வரவு அதிகரிக்கும். மனோபலம் கூடும். உடல் நலம் சீராகும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் பெற முடியும். சொத்துப் பிரச்னைகள், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

புதிய மனிதர்களை நம்பி பெரிய காரியங்கள் எதிலும் இறங்க வேண்டாம். பிரயாணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். நண்பர்கள் வகையில் பல நன்மைகள் கிடைக்கும். வங்கி கணக்கில் பணம் கணிசமாக உயரும். நண்பர்கள் உங்களை தேடி வந்து உதவி செய்வர்.

கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். தந்தை வழியில் இருந்த சொத்து பிரச்சனை தீரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. வெளிநாடு சென்று வரும் பாக்கியம் கிட்டும்.

மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தையை அளந்து பேசவும். உடன்பிறப்புகளிடம் விட்டு கொடுத்து போகவும். உறவினர்களிடம் பண விஷயத்தில் மனஸ்தாபம் வர வாய்ப்புள்ளது, ஆகையால் கவனமாக இருக்கவும். எப்போதும் சம்பந்தமில்லாத விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்க்கவும்.

முக்கிய காரியங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் தெய்வ வழிபாட்டின் மூலம் அதை சரி செய்து கொள்ளவும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ளவும். கொடுக்கல் வாங்கலில் சிக்கலான சூழ்நிலையே காணப்படும்.

உத்யோகத்தில் எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை பல வகையில் உதவியாக இருக்கும்.

தொழில், வியபாரத்தில் பல புதுமையான விஷயங்களை செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். உங்கள் கடுமையான உழைப்பால் இந்த புத்தாண்டில் பல சாதனைகளை படைக்க முடியும்.

குறிப்பு : இந்த 2023ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

Previous articleசிம்ம ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023
Next articleதுலாம் ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023