Home Local news கணவருடன் தொடர்பில் இருந்த பெண்ணையும் அவரது குடும்பத்தையும் தாக்க பெற்றோல் குண்டு மற்றும் வாள்களுடன் சென்ற...

கணவருடன் தொடர்பில் இருந்த பெண்ணையும் அவரது குடும்பத்தையும் தாக்க பெற்றோல் குண்டு மற்றும் வாள்களுடன் சென்ற பெண் உட்பட ஐவர் கைது.

13

தனிப்பட்ட தகராறில் தாக்குதல் நடத்தும் நோக்கில் வாள்கள் மற்றும் பெற்றோல் குண்டுகளை ஏற்றிக்கொண்டு வேனில் பயணித்த பெண் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை, அருக்கொட மற்றும் வாதுவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கந்த உடவத்த பிரதேசத்தில் பயணித்த வேனை போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்ட போது, ​​சுமார் 3 அடி நீளமுள்ள வெள்ளை இரும்பு வாள், இரண்டரை அடி நீளமான கத்தி, தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்ட இரும்பு நெம்புகோல் மற்றும் பெற்றோல் குண்டு என்வற்றுடன் சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார், வேனையும் கைப்பற்றியுள்ளனர்.

பிரதான சந்தேகநபரின் கணவர் சிறையில் இருப்பதாகவும், குறித்த கணவருடன் தொடர்பில் இருந்த பெண்ணையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் தாக்கும் நோக்கத்தில் அவர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Previous article14 வயது .. ஆன்லைன் கிளாஸ் .. ஆறு லச்சம் பெறுமதியான ஐபோன் .. ஆபாச வெறியில் 8 பேருடன் படுக்கையை பகிர்ந்த அவலம்
Next articleமோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவன் உயிரிழப்பு