யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று (20) பகல் இந்த சம்பவம் நடந்தது.
டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலிருந்த 31 வயதான இளம் குடும்பப் பெண்ணும், 3 வயது குழந்தையுமே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
வாகனத்தில் வந்த 4 பேர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து இளம் குடும்பப் பெண்ணை தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அந்தப் பெண் எந்த பிரதிபலிப்பையும் காண்பித்திருக்கவில்லை. அழுதபடி சென்ற பிள்ளையையும் வாகனத்தில் ஏற்றப்பட்டது.
பெண்ணின் கணவன் கனடாவில் வசிக்கிறார்.
பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக சாவகச்சேரி பொலிசாரிடம் முறையிட்டனர்.