Home Local news கணவனைப் பழி வாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்

கணவனைப் பழி வாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்

9

கணவனை பழிவாங்கும் நோக்கில் ஒன்றரை வயது சிறுமியை இறால் தொட்டியில் தள்ளிய சம்பவம் உடப்பு , கட்டகடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக உடப்புவ பொலிஸார் கடந்த 4 ஆம் திகதி தெரிவித்துள்ளனர்.

உடப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவி, தனது பெண் குழந்தை இறால் தொட்டிக்குள் தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சிறுமி குருநாகல் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர். நீரில் தள்ளப்பட்ட சிறுமி தற்போது குணமடைந்து வருவதாக குருநாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சண்டமாலிசமரகோன் தெரிவித்துள்ளார்.

சிறுமியை இறால் வளர்ப்பு தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் 20 வயதுடைய தாய் சந்தேகத்தின் பேரில் உடப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தொட்டியில் விழுந்ததாக சந்தேக நபர் முதலில் பொலிஸாரிடம் தெரிவித்த போதிலும், இறால் பண்ணையின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது, சந்தேகநபர் குறித்த சிறுமியை பிடித்து அவளை தொட்டிக்குள் தள்ளும் காட்சி தெளிவாகத் தெரிந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இறால் தொட்டிக்குள் தள்ளிவிட்டு குழந்தையை காணவில்லை என கூறி தேடிய போது, ​​அதே இறால் பண்ணையில் பணிபுரியும் மற்றொரு தொழிலாளி, குழந்தை இறால் தொட்டியில் போராடுவதை பார்த்து அதில் குதித்து காப்பாற்றியதாக கூறினார்.

Previous articleமாணவி துஷ்பிரயோகம்; அதிபர் கைது
Next articleஇராணுவ முகாமின் முன் கார் விபத்து