Home Jaffna News கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி! யாழ்ப்பாணத்தில் நடந்த...

கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி! யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம், ஒருவர் கைது, இருவர் தேடப்படுகின்றனர்…

12

கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

யாழ்.நகரை அண்டிய பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இரவுவேளை வீடொன்றினுள் அத்துமீறி கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த மூவர் வீட்டில் இருந்த கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் அபய குரல் எழுப்பவே வீட்டினுள் நுழைந்த மூவரும் அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய இருவரும் தலைமறைவாகி உள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை தலைமறைவாகியுள்ள இருவரையும் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் – 26/12/2022, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleஎரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்