Home Local news கட்டணம் அதிகரிப்பு; இல்லையேல் 6 மணித்தியாலம் மின்வெட்டு

கட்டணம் அதிகரிப்பு; இல்லையேல் 6 மணித்தியாலம் மின்வெட்டு

8

மின்சாரக் கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படாவிடின், மின்வெட்டு தொடருமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார்

நாளாந்த மின்வெட்டைக் குறைக்கும் வகையில், மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டணங்கள் விதிக்கப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுவரையில் மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யவே மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அண்மையில் கூறப்பட்ட கூற்றுக்களை மறுத்த அவர், தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யவே இந்த கட்டண அதிகரிப்பு முன்மொழியப்படுவதாக விளக்கினார்.

எவ்வாறாயினும், தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், நாளாந்த மின்வெட்டு காலத்தை குறைந்தது ஆறு மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் முன்னதாக அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சாறி சிக்கியதில் துாக்கி வீசப்பட்ட தாயும், மகளும்! தாய் உயிரிழப்பு, மகள் படுகாயம்
Next articleலீசிங்கில் வாகனம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான சுற்றறிக்கை