Home Local news கடிதங்களை விநியோகிக்கும்போது போதைப்பொருளையும் விற்பனை செய்த தபால் ஊழியர் : சம்பளம் வாழ போதாது என்பதால்...

கடிதங்களை விநியோகிக்கும்போது போதைப்பொருளையும் விற்பனை செய்த தபால் ஊழியர் : சம்பளம் வாழ போதாது என்பதால் இவ்வாறு செய்தேன் என வாக்குமூலம் !

8

கடனில் இருந்து விடுபடுவதற்காக கடிதங்களை விநியோகிக்கும்போது போதைப்பொருளையும் விநியோகித்த குற்றச்சாட்டில் தபால் ஊழியர் ஒருவர் 5,150 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக அங்குலான பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான தபால் ஊழியர் போதைப்பொருள் விநியோகிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்க உத்தியோகம் இருந்தும் ஏன் இந்தத் தொழிலை மேற்கொண்டீர்கள் என சந்தேகநபரிடம் வினவியபோது, தனக்கு கிடைக்கும் சம்பளம் வாழ போதுமானதாக இல்லை எனவும், பணம் சம்பாதித்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleமனைவியுடன் தகாத தொடர்பை பேணிய இளைஞரை 16 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் : மரண தண்டனை விதித்தது மேல் நீதிமன்றம் !
Next articleஇரு பிள்ளைகளின் தந்தை தீப்பற்றி மரணம் !