Home Accident News ஒட்டுசுட்டானில் வாகன விபத்து : இரு இளைஞர்கள் பலி !

ஒட்டுசுட்டானில் வாகன விபத்து : இரு இளைஞர்கள் பலி !

11

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுசுட்டான், மாங்குளத்தில் நேற்றிரவு(05) உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முள்ளியவளை – பொன்னகர் பகுதியை சேர்ந்த 23 மற்றும் 24 வயதான இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஒட்டுசுட்டானில் வாகன விபத்து : இரு இளைஞர்கள் பலி ! - mutamil News - 24x7 Tamil Breaking News Website ஒட்டுசுட்டானில் வாகன விபத்து : இரு இளைஞர்கள் பலி ! - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleஇன்றைய ராசிபலன்கள் – 06.09.2023
Next articleசிறுமியை புதருக்குள் அழைத்துச் சென்று முத்தமிட்ட 43 வயது நபருக்கு நேர்ந்த கதி