ஐயப்பன் கோயிலுக்கு சென்ற போது ஏற்பட்ட காதல் முற்றி, சிவராத்திரியில் 15 வயதான காதலி வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து, உல்லாசமாக இருந்த காதலன் இப்பொழுது யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
சிவராத்திரியில் சிவனிற்கு விரதமிருக்கப் போவதாக வீட்டில் கூறிவிட்டு, வவுனியாவிலுள்ள வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து, சாவகச்சேரியில் காதலி வீட்டில் இரவை கழித்தவரே சிக்கியுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியே வன்புணர்விற்குள்ளாகியுள்ளார்.
சாவகச்சேரியை சேர்ந்த குடும்பமொன்று சிவராத்திரியில் அன்று மன்னார் திருக்கேதீச்சரத்திற்கு சென்று வழிபட திட்டமிட்டனர். எனினும், 15 வயதான மகள் கோயிலுக்கு வர மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால், மகள் தவிர்ந்த ஏனைய குடும்ப உறுப்பினர்கள் கோயிலுக்கு சென்றனர்.
அவர்கள் கோயிலுக்கு சென்ற பின்னர், வீட்டில் இளைஞன் ஒருவர் தங்கியிருந்தார் என அயலவர்களின் மூலம் தகவலறிந்த தாயார், மகளிடம் இது தொடர்பில் விசாரித்துள்ளார். எனினும், திருப்தியான பதில் கிடைக்காததையடுத்து, மகளை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில் சிறுமி வன்புணரப்பட்டுள்ளமை தெரிய வந்தது.
சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிவராத்திரியில் அன்று வீட்டிற்கு வந்த காதலரால் வன்புணரப்பட்டது தெரிய வந்தது.
சிறுமியின் வீட்டிற்கு அண்மையிலுள்ள ஐயப்பன் கோயிலுக்கு வந்த வவுனியா இளைஞன் ஒருவருடன் சிறுமி காதல் வசப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. கடந்த 3 மாதங்களாக இருவரும் தொலைபேசி வழியாக காதலை வளர்த்து வந்தனர்.
சிவராத்திரி தினத்தில் குடும்பத்தினர் மன்னார் திருக்கேதீச்சரம் செல்ல ஆயத்தமான போது, மாணவி கோயிலுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், வவுனியாவிலுள்ள காதலருக்கும் இந்த தகவலை அனுப்பியுள்ளார்.
இதன்படி, சிவராத்திரிக்கு குடும்பத்தினர் திருக்கேதீச்சரம் சென்ற பின்னர், வவுனியாக் காதலன் சாவகச்சேரியிலுள்ள காதலி வீட்டுக்கு வந்துள்ளார்.
வவுனியாவிலுள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்ட போதும், மன்னார் திருக்கேதீச்சரத்துக்கு செல்வதாக கூறிவிட்டே காதலி வீட்டுக்கு சென்றுள்ளார்.
மறுநாள் பெற்றோர் வீடு திரும்பிய பின்னர், அயலவர்கள் வழங்கிய தகவல், மற்றும் சில சம்பவங்களால் சந்தேகமடைந்த தாயார், மாணவியிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். மாணவி எதையும் வெளிப்படுத்தவில்லை.
இதையடுத்து, மகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனையில், மாணவி வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் வவுனியா காதலன் கைது செய்யப்பட்டார். அவருக்கு 20 வயது. நேற்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.