மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் ஏழு வயது சிறுமி தாமரைக்கேணி குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் பகுதியில் தாமரைக்கேணியை சேர்ந்த ஏழு வயதுடைய மர்சூக் பாத்திமா றினா என்ற சிறுமியே நேற்று மாலை மூழ்கிய கேணியில் சிறுவர்கள் பலருடன் விளையாட்டிற்க்காக இறங்கி குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மண் அகழ்வினால் கேணியில் ஒருபக்கமாக நீர்மட்டம் உயர்ந்து இருந்ததனால் அறியாத இக் குழந்தை சுமார் 05 அடி ஆழமுள்ள நீருக்குள் தாண்டதினால் மேல வர முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாள்.
சிறுமி நீரில் மூழ்குவதை அவதானித்த மற்ற சிறுவர்கள் சவுக்கடி வீதிக்கு ஓடிவந்து அவ் வழியால் சென்றவர்களிடம் விசயத்தை தெரிவிக்க,
அவர்கள் அந்த இடத்துக்கு சென்று சிறுமியை தாண்ட நிலையில் சடலாமாக மீட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சிறுமையை ஏறாவூர் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து,
விசாரணை முடிவில் பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு ஏறாவூர் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.