Home Tamil News எரிவாயு பயன்படுத்தும் குடும்பத்தினரின் வயிறு எரியும் வகையில் காஸ் விலை எகிறியது

எரிவாயு பயன்படுத்தும் குடும்பத்தினரின் வயிறு எரியும் வகையில் காஸ் விலை எகிறியது

13

சமையல் எரிவாயு பயன்படுத்தும் குடும்பத்தினரின் வயிறு எரியும் வகையில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது,

12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ. 343 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் திருத்தப்பட்ட விலை ரூ. 3,470 லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 137 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூ. 1,393 ஆகும்.

2.3 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான புதிய விலை ரூ. 650 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleSeylan Bank Internship Vacancies
Next article3 மாத சிசுவின் தீராத நோயைக் குணப்படுத்த சத்திரசிகிச்சைக்கு நிதி திரட்டிய மூவர் கைது