Home Local news எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலையில் மாற்றம்

13

டொலர் வீழ்ச்சியால் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணம் மக்களுக்கும் வழங்கப்படும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Previous articleஉழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் சாரதி ஒருவர் உயிரிழப்பு
Next articleதனிமையிலிருந்த யுவதி கொலை: இராணுவ சிப்பாய் கைது