நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் குறைத்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 405 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெற்றோல் உள்ளிட்ட ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.