Home Local news திருகோணமலை பொது வைத்தியசாலையில் இளம் தாயை பலியெடுத்த சத்திர சிகிச்சை!! நடந்தது என்ன?

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இளம் தாயை பலியெடுத்த சத்திர சிகிச்சை!! நடந்தது என்ன?

16
திருகோணமலை பொது வைத்தியசாலையில் வயிற்று குற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட இளம் தாயொருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒன்பதாம் திகதி வயிற்று குற்று காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை – தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ஐந்து மாத கைக்குழந்தையின் தாயாரான குணசிங்க முடியன்சலாகே ஹன்சிகா பியூமாலி சமரசேன (23 வயது) எனவும் தெரியவருகின்றது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இளம் தாயை பலியெடுத்த சத்திர சிகிச்சை!! நடந்தது என்ன?

நடந்தது என்ன??

குறித்த இளம் தாய் கடந்த வாரம் பித்தப்பையில் ஏற்பட்ட கல் காரணமாக சத்திரசிகிச்சை விடுதி இலக்கம் 12 ல் அனுமதிக்கப்பட்டு குழாய் வழி ( Laparoscopic Cholecystectomy ) சத்திரசிகிச்சை மூலம் பித்தப்பையானது வெட்டி அகற்றப்பட்டிருந்தது.

பின்னர் மூன்று நாட்களில் குறித்த இளம் தாய் வீடு சென்றிருந்தார்.

விடு சென்ற நாள் முதல் குறித்த பெண்ணிற்கு தீவிர வயிற்று குத்து இருந்துள்ள நிலையில் மீண்டும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அச்சமயம் குறித்த பெண்ணிற்கு சத்திரசிகிச்சை செய்த வைத்திய நிபுணர் விடுமுறையில் சென்றிருந்ததாலும் அந்த  விடுதிக்கு அனுமதி இல்லாத காரணத்தினாலும் மற்றைய சத்திர சிகிச்சை நிபுணரின் விடுதியான விடுதி இலக்கம் 15 ற்கு குறித்த நோயாளி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவ் அனுமதி தொடர்பாக சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்திய நிபுணரிற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இளம் தாயை பலியெடுத்த சத்திர சிகிச்சை!! நடந்தது என்ன?

இந்நிலையில் குறித்த இளம் தாயின் உடல்நிலை மேலும் மோசமானதால் மேலதிக சிகிச்சைக்காக அதி உச்ச பராமரிப்பு தேவைப்படும்  ICU விற்கு நோயாளி மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நோயாளி மறு நாள் இறந்துள்ளார்.

இதேவேளை, 15 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு கடமையில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் தாதியரிடம் பெண் மயக்கமுற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்ததாகவும், கடமை நேர வைத்தியர்களுக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் எழுந்த குற்றச்சாட்டை வைத்தியர்கள் முற்றாக மறுத்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை தொடங்கி இன்றைய நாள் வரையான ஒரு கிழமை காலப்பகுதியில் ஒருவர் மாறி ஒருவராக சுமார் 24 மணி நேரமும் ஒரு வைத்தியர் கடமையில் இருந்துள்ளதை ஏனைய நோயாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த இளம் தாய் அதே விடுதியில் பணிபுரியும் சுகாதார உதவியாளர் ஒருவரின் உறவினர் என தெரியவருகின்றது. பெய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் குறித்த ஊழியர் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் முன்னரும் பலதடவை பதியப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின்னர் சதையில் ( pancreas ) ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இளம் தாயை பலியெடுத்த சத்திர சிகிச்சை!! நடந்தது என்ன?

** பொதுவாக சத்திர சிகிச்சை சிகிச்சை ஒன்றினை மேற்கொண்டால் அங்கு நோயாளிக்கு கிருமி தொற்று ஏற்படாதிருக்க சில நாட்களிற்கு ஊசி மூலம் கிருமி எதிர்ப்பு மருந்து வளங்கப்படுவது வளமை. பின்னர் இது வாய் வளி மூல மருந்தாக மாற்றப்பட்டு நோயாளி நிலைக்கேற்ப வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்.

** நோயாளி விடுதி இலக்கம் 15ல் அனுமதிக்கப்படும் போது அவரிற்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனையில் நோயாளி வயிற்றில் அழுக்கு நீர் தேங்கி இருந்தது ஏனைய வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

** மேலும் உணவு சமிபாட்டிற்காக சதையீ யால் சுரக்கப்படும் சதைய சாறு உணவு கால் வாய் பகுதியை அடைய முடியாமல் கல் ஒன்று அடைத்து இருந்ததுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

** இதன் காரணமாகவே நோயாளிக்கு தொடர்ந்தும் வயிற்று குற்று இருந்துள்ளது.

** நோயாளியின் அனுமதி முறைப்பாட்டின்படி சத்திர சிகிச்சைக்கு முன்னர் இருந்தது போலவே வயிற்று குற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.

** அப்படியானால் எதற்காக பித்தப்பையை மட்டும் வெட்டி அகற்றினார்கள்? பித்தப்பை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் போது ஏன் ஏனைய உறுப்புக்கள் தொடர்பாக பரிசோதிக்காமல் விட்டார்கள்?

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இளம் தாயை பலியெடுத்த சத்திர சிகிச்சை!! நடந்தது என்ன? - mutamil News - 24x7 Tamil Breaking News Website

** சாதரணமாக சதையீ ல் கிருமி தொற்று அதனாலே உயிரிழப்பு என முடித்து விடாமல் சதையீ ல் எவ்வாறு கிருமி தொற்று ஏற்பட்டிருக்கும்??

** ஒன்று சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்டிருக்கும் அல்லது நீண்ட நாட்கள் கல் அடைத்து இருந்ததனால் ஏற்பட்டிருக்கும். இவ்வாறான இரு காரணங்களும் சுட்டிக்காட்டுவது யாரை?? இவ்வாறான நிலையில் இதற்கு யார் பொறுப்பு?

இது போன்ற பல விடை தெரியா கேள்விகளுடன் அபலச்சாவடைந்த ஆத்மாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

Previous articleமுல்லைத்தீவில் தவறவிடப்பட்ட தாலிக்கொடியை உரியவரிடம் ஒப்படைத்த பேக்கரி உரிமையாளர்! (படங்கள்)
Next articleநாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது