Home Local news இரட்டைக் குழந்தைகளின் உயிர் பறிபோனது!! மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என பொலிஸில் முறைப்பாடு

இரட்டைக் குழந்தைகளின் உயிர் பறிபோனது!! மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என பொலிஸில் முறைப்பாடு

11

களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைமாத சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ ஹொன்னந்தர சர்வோதய மாவத்தை பகுதியைச் சேர்ந்த அகிலா போனிபஸ் என்பவர் கடந்த 8 ஆம் திகதி பிரசவத்திற்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மறுநாள் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் குழந்தைகள் குறைமாத சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் கடந்த 19ஆம் திகதி ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் சுவாசக் கோளாறு காரணமாக அக்குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் மற்றைய குழந்தைக்கு தாய் பாலூட்ட சென்ற போது அந்த குழந்தையும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இரட்டைக் குழந்தைகளின் உயிர் பறிபோனது!! மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என பொலிஸில் முறைப்பாடு - mutamil News - 24x7 Tamil Breaking News Website

இது தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர், கொஹுவல பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனியவிடம் வினவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம் அது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Previous articleபுல்மோட்டையில் விவசாயிகளுக்கு சொந்தமான காணிக்குள் அடாத்தாக புகுந்த பிக்கு அராஜகம்
Next articleமதுபோதையில் ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர் பலி