Home Astrology news இன்றைய ராசிபலன்கள் – 26.08.2023

இன்றைய ராசிபலன்கள் – 26.08.2023

506

இன்றைய பஞ்சாங்கம்

26-08-2023, ஆவணி 09, சனிக்கிழமை, தசமி திதி இரவு 12.08 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. கேட்டை நட்சத்திரம் காலை 08.37 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். ஆவணி மூலம். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிபலன்கள் – 26.08.2023

மேஷம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 8.37 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் பொறுமை தேவை. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுப முயற்சிகளையும், பயணங்களையும் மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 8.37 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கடகம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

கன்னி

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும்.

தனுசு

இன்று எதிர்பாராத விதமாக மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

மகரம்

இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

கும்பம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

இன்று பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

Previous articleமர்ம நபரால் வழங்கப்பட்ட ஐஸ் பானம் – சிறுவனுக்கு நேர்ந்த கதி! பெற்றோர்களே மிகவும் அவதானம்
Next articleபொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த இளைஞர்: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here