Home Jaffna News ஆடு மேய்க்க சென்ற புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு!

ஆடு மேய்க்க சென்ற புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு!

12

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.

வாதரவத்தை – பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆடு மேய்க்க சென்று இருந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வரையில் வீடு திரும்பாத நிலையில் , இளைஞனின் தந்தை தேடி சென்ற போதே இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

வலிப்பு காரணமாக உயிாிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது.

சம்பவம் தொடா்பாக அச்சுவேலி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆடு மேய்க்க சென்ற புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு! - mutamil News - 24x7 Tamil Breaking News Website ஆடு மேய்க்க சென்ற புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு! - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleமுல்லைத்தீவில் காதல் தோல்வி?? 25 வயது இளைஞர் உயிர்மாய்ப்பு!
Next articleமுல்லையில் வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை