Home obituary news அறிவும் ஆற்றலும் நிரம்பிய ஆளுமையின் அத்தியாயம் ஒன்று மெல்லச் சரிந்தது

அறிவும் ஆற்றலும் நிரம்பிய ஆளுமையின் அத்தியாயம் ஒன்று மெல்லச் சரிந்தது

19

பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தின் நீண்ட கால செயற்பாட்டாளராகவும் தேசிய செயற்பாடுகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழுக்கும் தமிழ்க் கலைக்குமாக காலநேரம் பாராது பணிசெய்த தேசிய செயற்பாட்டாளன் திரு. சந்திரராசா அகிலன் அவர்கள் இன்று (22.09.2023) மீள முடியாத துயிலடைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியினை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

புலம்பெயர்வாழ் தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ் மொழி, தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்காக பணிசெய்த அற்புதமான செயற்பாட்டாளனை அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் இன்று இழந்து நிற்கிறது.

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வளர்ச்சிக்கு அமரர் திரு. சந்திரராசா அகிலன் அவர்கள் ஆற்றிய பணிகள் அளப்பெரியவை.

அமரர் திரு. சந்திரராசா அகிலன் அவர்களுடைய ஆத்மா அமைதியடைய பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

நாகராஜா விஐயகுமார்
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

Previous articleமன்னாரை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!
Next articleமுல்லையில் 9 வயதில் சிறுமி துஸ்பிரயோகம்!! 6 வருடங்களின் பின் 15 வயதில் மீண்டும் கர்ப்பம்!! நடந்தது என்ன?