Home Ampara news அம்பாறை மாவட்டம் பாலமுனையில் இருந்து மாணவன் முஸம்மில் அஷாஸ் கால்பந்து ...

அம்பாறை மாவட்டம் பாலமுனையில் இருந்து மாணவன் முஸம்மில் அஷாஸ் கால்பந்து வீரனாக இந்தியா பயணம்

11

(எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனையிலிருந்து முஸம்மில் அஷாஸ் என்ற மாணவன் கால்பந்து வீரனாக இந்தியா பயணமாகின்றார்.

பெப்பிள்ஸ் அகாடமியில் இருந்து திறமையான கால்பந்து அணி கால்பந்து பயிற்சி மற்றும் போட்டித் திட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்குச் செல்லவுள்ளது.

அம்பாறை மாவட்டம் பாலமுனையில் இருந்து மாணவன் முஸம்மில் அஷாஸ் கால்பந்து வீரனாக இந்தியா பயணம் - mutamil News - 24x7 Tamil Breaking News Website

“பெப்பிள்ஸ்” அகடமியின் சிறந்த கால்பந்து வீரரான முஸம்மில் அஷாஸ் இந்தியாவில்
கால்பந்து பயிற்சி மற்றும் போட்டி திட்டத்தில் “பெப்பிள்ஸ்” அகடமியின் சார்பாக பங்குகொள்ள வே இந்தியா பயணமா கின்றார்.

“பெப்பிள்ஸ்” அகடமி மாணவர்களை
கல்வியில் மேம்பாட்டுடன் அத்தியாவசியத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், நாளைய சவால்களை எதிர்கொள்ளவும் உதவும் வகையில் விளையாட்டு, நாடகம் மற்றும் பொதுப் பேச்சு போன்ற பல்வேறு பாடநெறிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் பங்கேற்குமாறு மாணவர்களை ஊக்குவிப்பதுடன்,
அவர்களின் திறமைகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

மாணவன் முஸம்மில் அஷாஸ், உள்நாட்டு இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் எம்.எம்.முஸம்மிலின் புதல்வராவார்

Previous articleவர்த்தகர் ஒருவரின் வீட்டில் ரகசியமாக நுழைந்தவர்கள் கோடிக் கணக்கில் திருடிச்சென்ற சம்பவம் பதிவு.
Next articleயாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு கடற்பரப்பில் 100 வரையான பயணிகளுடன் படகு ஒன்று தத்தளிப்பதாக தகவல்!